• vilasalnews@gmail.com

தட்டார்மடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணி நிறைவு பிரிவ உபச்சார விழா : சாத்தான்குளம் டிஎஸ்பி பங்கேற்பு!

  • Share on

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த குரூஸ் மைக்கேல் பணி நிறைவு பெற்றதையடுத்து, அவருக்கு பணி நிறைவு பிரிவு உபச்சார விழா காவல் நிலைய வளாகத்தில்  நடைபெற்றது.

விழாவிற்கு, சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் அனிதா, தாம்சன் ஜெயத்துரை, பாமா பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் வேணுகோபால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தட்டார்மடம் பங்குதந்தை கலைசெல்வம் ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  

தொடர்ந்து, சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி, பணி  நிறைவு பெற்ற  உதவி ஆய்வாளர் குரூஸ் சுமைக்கிலுக்கு மோதிரம் வழங்கி பேசுகையில், "காவல்துறை பணி சேவை மிக்கது. பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இருப்பதால் தான் இப்பணிகளில் மேலும் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று பேசினார்". மேலும், இதில் பொது மக்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டு பணி  நிறைவு பெற்ற உதவி ஆய்வாளர் குரூஸ் சுமைக்கிலுக்கு தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

  • Share on

கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம்!

  • Share on