• vilasalnews@gmail.com

கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

  • Share on

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஓட்டப்பிடாரம் அருகே  குறுக்குசாலையில் கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


விழிப்புணர்வு பேரணியானது  குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி குறுக்குசாலை பஜார் வழியாக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை சென்றடைந்து பேரணி நிறைவு பெற்றது. 

பேரணியை  தூத்துக்குடி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன் ஆகியோர் கொடி அசைத்து  தொடங்கி வைத்தனர். பேரணியில் குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகை பதாகைகளை ஏந்தி சென்றனர்.


இந்த நிகழ்ச்சியில், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் முருகன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

இருளில் மூழ்கும் கோவில்பட்டியின் பிரதான சாலை - கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

தட்டார்மடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணி நிறைவு பிரிவ உபச்சார விழா : சாத்தான்குளம் டிஎஸ்பி பங்கேற்பு!

  • Share on