தூத்துக்குடியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் தூத்துக்குடி, சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில்,
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
- சத்துணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர், வனக்காவலர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850/- வழங்க வேண்டும்,
- IFHRMS திட்டத்தை கைவிட வேண்டும்,
- ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் மீது போடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்,
- முடக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்கிட வேண்டும்,
- கம்முட்டேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்,
- அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்,
- அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்,
- அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளுக்குமான செலவு தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்கவேண்டும் எனவும்,
- சித்திக் ஐஏஎஸ், நீதியரசர் முருகேசன் மற்றும் ஸ்ரீதர் ஐஏஎஸ் குழு அறிக்கைகளை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் .
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தில், மாவட்ட துணை தலைவர் அல்போன்ஸ் லிகோரி மற்றும் சாந்தகுமார், மாவட்ட இணை செயலாளர் டெரன்ஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.