• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம்!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் லெனின் தலைமையில் குறுக்குசாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, மானாவரி விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு இலவச சிறப்பு தொகுப்பு நிதி  வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்படும் பிஎம் கிஷான் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர்  நல்லையா, ஒன்றியச் செயலாளர் அசோக் குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட விவசாயிகள் விவசாயி சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் வெற்றி விநாயகர் சிறப்பு பூஜை!

இருளில் மூழ்கும் கோவில்பட்டியின் பிரதான சாலை - கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

  • Share on