தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வெற்றி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
இதனையொட்டி, ஸ்ரீ வெற்றி விநாயகரருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்ரமணிய ஐயர் செய்தார். இதில், சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.