எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைபணி நடக்கிறது என்றும், தரமான சாலையாக அமைக்க வேண்டியும் எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் தரப்பில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அழைத்து உங்கள் கோரிக்கை நியாயமானது நான் ஒப்பந்ததாரரிடம் கூறி விட்டேன். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் பழைய சாலையை முறையாக அகற்றிவிட்டு தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாளை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், பதினைந்து நாட்களுக்குள் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அதன்பிறகு உரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.