• vilasalnews@gmail.com

களை கட்ட காத்திருக்கும் தூத்துக்குடி.... 26ஆம் தேதி கொடியேறுகிறது!

  • Share on

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 442-ஆம் ஆண்டு திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 442-ஆம் ஆண்டு பெருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இதைமுன்னிட்டு, ஜூலை 26 அன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ஆம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா நாட்களில், ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகளும் நடக்கும். 

ஆகஸ்டு 5-ஆம் தேதி அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் நற்கருனை ஆசிர் நடைபெற இருக்கிறது.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : அவங்க மேல கொலை வழக்கு போடுங்க - அதிகாரிகள் மீது கடுகடுத்த உயர்நீதிமன்றம்!

  • Share on