• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் மின் கம்பம் மீது இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.  

தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சக்திவேல் (22). அவரது நண்பர் காளி முருகன் மகன் செல்வகுமார் (23). இவர்கள் இருவரும் நேற்று தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று பைக்கில் கொண்டிருந்தனர். பைக்கை சக்திவேல் ஓட்டினார். அப்போது சத்யா நகர் வளைவில் திரும்பும் போது திடீரென பைக் நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்றொரு இளைஞரான செல்வகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

கட்டபொம்மன் நகர் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் மதிமுக கோரிக்கை!

களை கட்ட காத்திருக்கும் தூத்துக்குடி.... 26ஆம் தேதி கொடியேறுகிறது!

  • Share on