தூத்துக்குடி மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் 12ம் தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் மையப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகவே, கட்டபொம்மன் நகர் 12வது தெரு நான்கு சாலைகள் சந்திக்கும் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமிடம் மாநகர செயலாளர் போ.முருகபூபதி தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சரவணப்பெருமாள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, தங்களது கோரிக்கை மீது துரித நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தருவதாக கூறியுள்ளார்கள்.