தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நிற்கும் ரயிலை எளிதாக அடையும் வகையில், மாற்றுத் திறனாளிகள், வயதான பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பயணிகள் இந்த சேவை பெற முன்கூட்டியே 875 4404 310 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
இந்த சேவை விரைவில் நெல்லை, கோவில்பட்டி ரெயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி செய்து கொடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.