• vilasalnews@gmail.com

அரசு மானியத்துடன்துடன் நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகிறீர்களா? உடனே விண்ணப்பியுங்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-2025-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான (250 கோழிகள்/அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் 250 நாட்டுக் கோழிகள் வளர்த்திட குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கான விலையில் 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள், கோழித் தீவனங்கள் ஆகியவற்றிக்கான மொத்த விலையில் ரூ.1,56,875 மானியமாக மாநில அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் 30% SC/ST  பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ முந்தைய ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 10.07.2024-க்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

  • Share on

விவசாயிகளுக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக வைத்த கோரிக்கை!

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வந்துள்ளது இந்த புதிய வசதி!

  • Share on