விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக மாநகர செயலாளர் போ.முருகபூபதி தலைமையில் மாநகர அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் டேவிட்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆகிேயார் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீவைகுண்டம் வட்டம் வௌ்ளுர் கஸ்பாகுளம் 3 மற்றும் 4வது மடை மழை வௌ்ளத்தால் பழுதடைந்துள்ளன. அதை சாியாக சீர்செய்யப்படவில்லை. ஆகவே விவசாயிகள் நலன் கருதி மடையை சீர்செய்ய வேண்டும். அப்பகுதியில் உரமூடைகளின் எண்ணிக்கையை அதிகாித்து விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் வௌ்ளத்தால் தண்ணீர் செல்லும் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதை விவசாயிகள் நலன் கருதி சாி செய்ய வேண்டும். மூலக்கரை கிராமத்தில் விவசாயிகள் செல்லும் கரைரோட்டில் முள்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் அதை சீர்செய்து தரவேண்டும்.
விவசாயிகளின் உயிர்நாடியான ஆடு மாடுகள் சமீபகாலமாக திருச்செந்தூர் சாத்தான்குளம் பகுதியில் அடிக்கடி மின்கம்பி வயர் அருந்து விழுவதால் ஆடு மாடுகள் பலியாகி கொண்டிருக்கின்றன. மின்சார வாாியம் விவசாயிகளின் நலன் கருதி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கோாிக்கையை விவசாயிகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.