தூத்துக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலை பகுதியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான அலுவர்கள், போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள ஓரு உணவகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சட்ட விரோதமாக மது விற்பனை ஆகியவை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.