தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார்.
அப்பொழுது கார்த்திக்கின் மனைவி ஜோதி கடற்கரையில் புனித நீராடும்போது தனது 5 சவரன் தங்க செயினை தவறவிட்டார். இது தொடர்பாக அவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு குழுவினரை வரவழைத்து தேடுதல் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
50 க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடிய நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் தங்க செயினை திருப்பி கொடுத்தனர். தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்த குழுவினருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருச்செந்தூர் முருகனை நம்பினோர் கைவிடப்படார் என்றும் முருக பக்தர்களும் ஆன்மிக ஆர்வலர்களும் சிலாகித்துக் கொண்டர்.