தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாற்றப்பட்டு புதிய ஆணையராக ஷரண்யா அறி நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நிலஅளவை மற்றும் கணக்கெடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த ஷரண்யா அறி, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.