• vilasalnews@gmail.com

இருசக்கர வாகன விபத்தில் கடலோர பாதுகாப்பு படை ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழப்பு : தூத்துக்குடியில் காலையிலேயே சோகம்!

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் நிறுவன பணியாளர் பேருந்து மோதிய விபத்தில் இந்திய கடலோர பாதுகாப்பு படை ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பி & டி காலனி 10வது தெருவைச் சேர்ந்தவர் இந்திரன் மகன் விஷ்னு (31). இவர் இந்திய கடலோர பாதுாப்பு படையில் என்சிசி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று காலை பணி முடிந்து தனது இருசக்கரவாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மில்லர்புரம் சந்திப்பு அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் நிறுவன பணியாளர் பேருந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஷ்னு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் ஆய்வாளர் (பொ) பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து பஸ் டிரைவர் ஜேஜே நகர் 5வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் விஜயராஜ் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

தொடரும் விபத்து - என்ன செய்ய வேண்டும்?

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓட்டுநரும் சமூக ஆர்வலருமான கருணாலப் பாண்டி கூறுகையில்:-

தூத்துக்குடியில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், வேகத்தடைகள் மீது அதனை காட்டிடும் வகையில் வெள்ளை கோடுகள் இல்லாததால் வேகத்தடைகள் இருப்பதே தெரியாமல் போகிறது. அதே போல், தேவையான இடங்களில் வேகத்தடைகளும் அமைக்கப்படாமல் உள்ளது.


ஆகவே, இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றார்.

  • Share on

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் இன்று மின்தடை... உங்க ஏரியா இருக்கானு பாத்துகோங்க!

தூத்துக்குடியில் இயங்கும் அரசு, தனியார் பள்ளிகளில் கழிவறை வசதிகள் : சுகாதார துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்!

  • Share on