• vilasalnews@gmail.com

வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்த மாமன்னர் தேர்மாறன் கல்லறை விவகாரம் : பள்ளி நிர்வாகம் பயன்படுத்த தடை!

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட மாவீரர்களோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து, இறுதிவரை அடிபணியாமல் வாழ்ந்து மறைந்தவர் தான் மாமன்னர் பாண்டியாபதி தெக்குருஸ் பாரத வர்ம பாண்டியன் (எ) தேர்மாறன் ஆவார்.

இவர் பரத குல சமுதாய மக்களின் தலைவராகவும், கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள கடல் துறைகளின் மான்னராகவும் இருந்தவர். மேலும் தூத்துக்குடி புனித பனிமய அன்னைக்கு தங்கத்தில் தேர் செய்து கொடுத்தவர். இவரது கல்லறை தூத்துக்குடி லசால் பள்ளி ஒட்டிய கல்லறை பகுதியில் உள்ளது.

பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை இருக்கும் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தில், சமீப காலமாக தூத்துக்குடி லசால் பள்ளி நிர்வாகம் கல்லறைக்கு செல்லும் பாதையை அடைத்து, காங்கிரீட் கட்டுமானங்களை கட்டியது. மேலும் பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை அவமதிக்கும் நோக்கத்தில் கல்லறை கற்களை திருடி மறைத்து வைப்பதும், கல்லறை மீது கட்டுமான குப்பைகளை போட்டு அவமதிப்பது போன்ற செயல்களை செய்து வந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பரத குல மக்கள் 31/5/2024 அன்று லசால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர். இந்தநிலையில் காவல்துறை தலையிட்டு கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனாலும் லசால் பள்ளி நிர்வாகம் அத்துமீறி கட்டுமான பணியை செய்தது, எனவே மீண்டும் பிரச்சனை ஏற்ப்பட்டு, கட்டுமானம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (13.6.2024) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 கல்லறை கற்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், கல்லறைக்கு வணக்கம் செலுத்த செல்லும் வழியை உடனடியாக உடைத்து திறக்கவேண்டும், கல்லறை இருக்கும் 42 சென்ட் இடத்தை பரத சமுதாயத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கு லசால் பள்ளி நிர்வாக தரப்பில், அவர்கள் தலைமையிடம் கேட்டு சொல்ல, ஒரு மாத அவகாசம் கேட்கப்பட்டது. எனவே அடுத்த கூட்டம் ஜூலை 18 தேதி என அறிவிக்கப்பட்டது. அதுவரை லசால் பள்ளி நிர்வாகம் பாண்டியாபதி தேர்மாறன் கல்லறை இருக்கும் பகுதியை பயன்படுத்த தடை விதித்து தூத்துக்குடி வட்டாட்சியர் உத்தரவு. மேலும் காணாமல் ஆக்கப்பட்ட 3 கல்லறை கற்களை உடனடியாக ஒப்படைக்கவேண்டும் என உத்தரவு இடப்பட்டது. 

மேலும்,மாநகராட்சி அனுமதி இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக அந்த இடத்தில் கட்டப்பட்டு இருக்கும் கான்கிரீட் கட்டுமானங்களை மாநகராட்சி மூலம் ஆய்வு செய்து உடனடியாக அப்புறப்படுத்த வழிவகை செய்யப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பூங்கா இடம் மோசடியாக விற்பனை : பலே கில்லாடி பெண்ணுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தாரா தூத்துக்குடி சார் பதிவாளர்? பரபரக்கும் தூத்துக்குடி!

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் - தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்!

  • Share on