• vilasalnews@gmail.com

வீட்டிற்கு பின்புறம் கட்டிவைத்திருந்த ஆட்டுக் குட்டியை ஆட்டையப்போட்ட 3 பேர் கைது!

  • Share on

திருச்செந்தூர் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மனைவி பேச்சித்தாய் (41) என்பவர் தனது ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் மேற்படி கட்டி வைத்திருந்த ஆடுகளில் ஒரு ஆடு கடந்த 08.06.2024 அன்று திருடு போனது பேச்சித்தாய்க்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேச்சித்தாய் நேற்று (13.06.2024) அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வீரபாண்டியபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களான முருகன் மகன் பாலமுருகன் (எ) சடையன் (45), பட்டுராஜா மகன் விஜய கோபால் (எ) விஜி (30) மற்றும் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேர்மதுரை (33) ஆகியோர் மினி சரக்கு வாகனத்தின் மூலம் மேற்படி ஆட்டை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பாலமுருகன் (எ) சடையன், விஜய கோபால் (எ) விஜி மற்றும் சேர்மதுரை ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 5000 மதிப்புள்ள ஒரு ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட  பாலமுருகன் (எ) சடையன் மீது ஏற்கனவே திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், விஜய கோபால் (எ) விஜி மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 9 வழக்குகளும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சேர்மதுரை மீது திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா புழக்கத்திற்கு எதிரான வேட்டை : 5 கிலோ 700 கிராம் கஞ்சா பிடிபட்டது!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பூங்கா இடம் மோசடியாக விற்பனை : பலே கில்லாடி பெண்ணுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தாரா தூத்துக்குடி சார் பதிவாளர்? பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on