தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் நேற்று (13.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகன் பிரைட் (19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் பிரைட் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.