• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை மிரட்டி மது பாட்டில்கள் பறிப்பு : வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து கடை ஊழியரை மிரட்டி மது பாட்டில்களை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் சத்திரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, கடந்த 10ஆம் தேதி ஊழியா்களை இரும்புக் கம்பியைக் காட்டி மிரட்டி சிலர் மது பாட்டில்களை பறித்துச் சென்றனராம். இது தொடா்பாக கடையின் மேற்பாா்வையாளா் சோமு (52) என்பவர் அளித்த புகாரின்பேரில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஜேம்ஸ் என்ற ஜேம்ஸ் சந்தோசம்(23), பூபாலராயா் புரத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் பாலமுருகன் (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். ஜேம்ஸ் சந்தோஷத்தை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் குடிநீர் விநியோகம் இருக்காது - என்னைக்கு ஏன்னு தெரியுமா?

எட்டையபுரம் அருகே 20 வழக்குகள் உள்ள ரவுடி கைது : எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை!

  • Share on