• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம் : பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50வது பிறந்தநாள் 22.6.2024 அன்று வர உள்ள நிலையில், அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 50 பள்ளி குழந்தைகளுக்கு இன்று 9.6.2024 புத்தகப்பை மற்றும் டிஃபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்த மாதம் ஜூன் 1 முதல் 22 ஆம் தேதி வரை பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று  தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 4வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு 50  பள்ளிக் குழந்தைகளுக்கு  புத்தகப் பை மற்றும் டிஃபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 

விழாவில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், கழகத்தின் தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மின்தடை | எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

பந்தயத்தில் காலை வெட்டிய தூத்துக்குடி தொண்டர்.. போனை போட்ட சசிகலா | நேரிலேயே பார்த்துட்டாரே எடப்பாடி பழனிசாமி!

  • Share on