• vilasalnews@gmail.com

உதவி காவல் ஆய்வாளர் கொலை 50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

  • Share on

தூத்துக்குடி உதவி காவல் ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியதவி மற்றும் குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை _எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பாலு (56). நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொது அந்த வழியாக "வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் அவ்வழியாக  குடிபோதையில் மினி லாரியை ஓட்டிவந்துள்ளார்.

இதனையடுத்து, குடிபோதையில் இருந்ததால் காவல் ஆய்வாளர் பாலு வாகனத்தைப் பறிமுதல் செய்து முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த  முருகவேல், மற்றொரு மினி லாரி மூலம் உதவி காவல் ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தலைமறைவாக  உள்ள முருகவேலை 10  தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சரவணக்குமார் முன்னிலையில்,சரண் அடைந்தார். உடனடியாக அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்ட நிலையில் அவர் பாளை சிறைக்கு  அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளருக்கு அரசு சார்பாக 50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேளையும் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

காவல் உதவி ஆய்வாளர் படுகொலை : தூத்துக்குடி அருகே பரபரப்பு

உதவி ஆய்வாளர் பாலுவின் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது

  • Share on