• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு என்னும் மையத்தின் பாதுகாப்பு பணியில் 1300 போலீசார்!

  • Share on

நாளை பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 19.04.2024 அன்று நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நாளை (04.06.2024) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு என்னும் மையமான தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 44 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1300 போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


மேற்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (03.06.2024) தூத்துக்குடி பாஸ்கர் மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமண்ய பால்சந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் ராஜசுந்தர், திருச்செந்தூர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் கென்னடி, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பொன்னரசு, மாவட்ட குற்றப்பிரிவு ராஜு, மாவட்ட குற்றப்பிரிவு II சந்திரதாசன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு செந்தில்இளந்திரையன், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் புருஷோத்தமன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது!

தூத்துக்குடியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண்; கருங்கல் திருட்டு : 2 பேர் கைது... லாரிகள் பறிமுதல்!

  • Share on