• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவரை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியைச் சேர்ந்த முருககுமார் மகன் கருப்பசாமி (41) என்பவர் கடந்த 01.06.2024 அன்று இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும்போது தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் கருப்பசாமியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவரை கல்லால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயற்சித்துள்ளனர். 

இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில், உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முனியசாமி நகரை சேர்ந்த முருகன் மகன் குப்பை (எ) இசக்கிராஜா (எ) குமார் (24) மற்றும் 2 இளஞ்சிறார்கள் சேர்ந்து மேற்படி கருப்பசாமியை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது.

இதனையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் குப்பை (எ) இசக்கிராஜா (எ) குமார் என்பவரை கைது செய்தும், இளஞ்சிறார்கள் 2 பேரையும் கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு என்னும் மையத்தின் பாதுகாப்பு பணியில் 1300 போலீசார்!

  • Share on