• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

  • Share on

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 03.05.2024 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் (44) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் செய்தனர். 

கைது செய்யப்பட்ட பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் (எ) சுறா பாஸ்கர் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் பாஸ்கர் (எ) சுறா பாஸ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

  • Share on

தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது!

  • Share on