தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி அப்பகுதி திமுகவினர் அவரது திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டம், பிரையண்ட் நகர் பகுதி சார்பில், 45 வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில், முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்திற்கு, தூத்துக்குடி மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவரும், பகுதிச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமையில், மதிமுக மாநகரச் செயலாளர் முருகபூபதி முன்னிலையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில், திமுக வட்டப்பிரதிகள் கல்யாணி சிவசுப்பிரமணியன், ரஜினி முருகன், முத்து, ரொமான்ஸ் நாயகம் சிம்பு சிவா செந்தில், சுரேஷ், இசக்கி, துரை ராபின்சன், சக்திவேல், தண்டாயுதபாணி, நாகராஜன், நாகலிங்கத்தேவர், முருகானந்தம், பகுதி பிரதிநிதி கோபால், முத்துவேல், சேசு, குருவி மேடு முருகன், சதீஷ்குமார், வசந்தகுமார், மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவண பெருமாள், செல்வமுருகன் இசக்கிமுத்து, சுப்பிரமணிய கட்டபொம்மன், ராதாகிருஷ்ண குமார், பகுதி அவைத் தலைவர் பால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டோர்.