மக்களவைத் தேர்தல் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
வருகிற 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு முன்னனி நிறுவனங்களின் சார்பில் கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியா, தமிழகம் என பல்வேறு மாநிலங்கள் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் 35 முதல் 38 இடங்கள் வரை திமுக வெற்றி பெறும் என்றும், அதிமுக, பாஜக இதர இடங்களை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தந்திடிவியின் சார்பில் நடத்தபட்ட கருத்துக்கணிப்பில் தூத்துக்குடியில் யார் வெற்றி பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமாகா சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜேன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.
இதில், திமுக 44 சதவீதமும், அதிமுக 29 சதவீதமும், தமாகாவிற்கு 13 சதவீதமும் மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் தூத்துக்குடியை சேர்ந்த திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வாக்கு எண்ணிக்கை நாளிலேயே முடிவுகள் தெரியும்.