• vilasalnews@gmail.com

தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகள் நடக்கிறதா?அதை தடுக்க செய்ய வேண்டியது என்ன? இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்து இதான்!

  • Share on

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், ''எல்லார் வீட்டிலும் சாமி போட்டோ இருக்கிறது. பூஜை அறை இருக்கிறது. ஆனாலும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவது குறையவில்லையே. அதேபோல் தான் இதுவும். சினிமா மக்களால் சேர்ந்து கூடி பார்ப்பது என்பது எப்போதும் மாறாது. ஓடிடி என்பது லைப்ரரி மாதிரி. பார்த்த படத்தை மீண்டும் பார்ப்பார்கள். சிலர் பார்க்காத படத்தையும் பார்ப்பார்கள். ஓடிடி அது போக்கில் இருக்கும். ஆனால் சினிமா எப்பொழுதுமே தியேட்டரில் கூட்டமாக பார்ப்பது என்பதால் தியேட்டரில் மவுஸ் குறையாது'' என்றார்.

தென்மாவட்டங்களில் சாதி கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு படங்களில் இருக்குமா? என்ற கேள்விக்கு, ''அடிப்படையாகவே இங்கு நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. உடனே மாற்ற முடியாது. காலகாலமாக புரையோடிப்போய் காலங்காலமாக மனதில் தங்கி இருக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது. அதையும் ரொம்ப மெனக்கெட்டு மாற்றக்கூடிய நிலை இருக்கிறது. நாம் சாதாரணமாக சொல்கிறோம் ஒரு சட்டம் போட்டால், ஒரு திட்டம் போட்டால் மாற்றி விடலாம் என்று. அதெல்லாம் முடியாது. உளவியலாக ரொம்ப ஸ்ட்ராங்காக ஜாதி இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறையும் சரி, அரசியலிலும் சரி எல்லா தளங்களிலும் சேர்ந்து ஒரு வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்ச புரிதலுக்கு உள்ளாவார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அரசியலுக்கு அனைவரும் வரலாம்” என கூறினார். 

  • Share on

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

தூத்துக்குடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்!

  • Share on