• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் லாரியில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டிவனம் அருகேயுள்ள காரச்சேரியைச் சேர்ந்தவர் தங்கப்பன் மகன் சரவணன் (47), லாரி டிரைவரான இவர், லாரியில் சரரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி கல்லூரி நகர் அருகே லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். 

பின்னர், அவர் லாரியில் மீண்டும் ஏறும்போது கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் ஆய்வாளர் (பொ) ராமலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

ஆக்கிரமிப்பு என தூத்துக்குடி அதிமுக மாமன்ற உறுப்பினர் வீடு இடிப்பு : அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் திமுகவின் சதி என மாமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகள் நடக்கிறதா?அதை தடுக்க செய்ய வேண்டியது என்ன? இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்த கருத்து இதான்!

  • Share on