• vilasalnews@gmail.com

ஆக்கிரமிப்பு என தூத்துக்குடி அதிமுக மாமன்ற உறுப்பினர் வீடு இடிப்பு : அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் திமுகவின் சதி என மாமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பாளையங்கோட்டை ரோடு அரசு பாலிடெக்னிக் அருகில் ஆக்கிரமிப்புகளை எடுப்பதாக கூறி முறையாக பட்டா உள்ள தனது வீடு இடிக்கப்பட்டுள்ளதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கூறுகையில் :-


ஆக்கிரமிப்பு எடுப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தின் வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு பாரபட்சத்தோடு ஆக்கிரமிப்புகளை தூத்துக்குடி மாநகராட்சி எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதி தான், அதிமுக மாமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் எனது வீட்டை மட்டும் ஆக்கிரமிப்பு எனக் கூறி அப்பகுதியில் இடித்துள்ளார்கள்.

ஆக்கிரமிப்பு இடிப்பதற்கு முன் இங்கே என்ன மாதிரியான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது, என்பது குறித்தும் மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளது. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் அதையெல்லாம் எடுக்காமல் குறிப்பிட்ட தனது வீட்டை மட்டும் இடித்து என்ன திட்டம் எதன் அடிப்படையில் கொண்டு வருகிறார்கள் என்பது தெரியவில்லை இது முழுக்க முழுக்க பாரபட்சமான நடவடிக்கை.


குறிப்பாக இப்பகுதியில் ஒரு கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளது அதையெல்லாம் எடுக்கவில்லை. கேட்டால் அது அமைச்சரின் சிபாரிசு எடுக்க முடியாது என்கிறார்கள். சட்டப்படி ஆக்கிரமிப்புகள் உள்ளவற்றை எடுப்பதில் எங்களுக்கு எந்த விதமான ஆட்சபனையும் இல்லை. ஆனால்,  ஆக்கிரமிப்பிகளை அகற்றுவதில் பாரபட்சத்தோடு காட்டும் போதே நாங்கள் எதிர்கிறோம். 

இவை முழுமுழுக்க திமுகவின் அரசியல் பழிவாங்கும் படலமே. இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன் என அதிமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தெரிவித்தார்.

  • Share on

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 ஆவது பிறந்த நாள் - தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை!

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on