இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 255 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 255ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடார சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், கழகத்தின் தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.