• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் "கண்ணப்பர் நாயனார் உற்சவ விழா"

  • Share on

தூத்துக்குடி ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ கண்ணப்பர் நாயனார் உற்சவ விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் தேரடி முன்பு  ஸ்ரீ கண்ணப்பர் நாயனார் உற்சவ விழாவானது முத்தரையர் மக்களால் கொண்டாடப்பட்டது.

பின்னர், கோவிலில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பர் நாயனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


முத்தரையர்களின் தலைவர்களான பெரிய ஊர் தலைவர் சந்தன செல்வம் அம்பலக்காரர், மேட்டுப்பட்டி முனியசாமி அம்பலக்காரர், முத்தரையர் நகர் தலைவர் கருப்பண்ண அம்பலக்காரர், விவேகானந்தர் நகர் தலைவர் பரமசிவம் அம்பலக்காரர், ஹார்பர் தலைவர் அண்ணா துறை அம்பலக்காரர், ஆகியவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

விழாவில், சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஆர். மீன் கம்பனி உரிமையாளர் சந்தணராஜ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விழாவில், சிலம்பாட்டம், சுருள் வாள் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மற்றும் இந்துமீனவர்கள்  செய்திருந்தனர்.

  • Share on

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் துவக்கி வைத்தார்

காவல் உதவி ஆய்வாளர் படுகொலை : தூத்துக்குடி அருகே பரபரப்பு

  • Share on