• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் முள்புதரில் கண்டெடுப்பு : போலீஸ் விசாரணை!

  • Share on

தூத்துக்குடியில் முள்புதர்களுக்குள் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி தெர்மல் நகர் ஊரணி ஒத்த வீடு பகுதியில், ஒரு தனியார் கம்பெனியின் பின்புறத்தில் முள்புதர்களுக்குள் அழுகிய நிலையில்  அடையாளம் தெரியாத  ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக விஏஓ ராஜேஷ் கண்ணா தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் பேரில் காவல் ஆய்வாளர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என தெரிகிறது. ஆனால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share on

விளாத்திகுளத்தில் தொழிலாளியிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் : நில அளவையா் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 4ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட மாவட்ட உத்தரவு!

  • Share on