அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை தர உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தருகிறார்கள். அதன்படி தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் இன்று (29.05.2024) காலை 11.00 மணிக்கு விமானம் மூலம் வந்திறங்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.
மாலை 4 மணிக்கு வாகைக்குளம் விமானநிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இந்நிகழ்வில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, மாநகர பகுதி, பேரூராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்பி.சண்முகநாதன் ஆகியோர் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளனர்.