ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில், அருள்மிகு பேச்சியம்மன், காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு புதிய பறவை கபாடிக் குழு, இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.
கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த பால்ராஜ் நினைவுக் கபடிக் குழுவிற்கு ரூபாய் பதினைந்தாயிரம் கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் வழங்கினார். முதல்பரிசுக்கான சுழற்கோப்பையினை இளைஞர் மன்றம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை இணைந்து வழங்கினர்.
இரண்டாம் பரிசாக ரூபாய் 12ஆயிரம் சென்னை கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் க.சங்கிலிமாடன் வழங்கினார். சுழற்கோப்பையினை அரசு ஒப்பந்ததாரர் அண்ணாதுரை மற்றும் தங்கையா, மாடத்தியம்மாள், சந்திரலேகா நினைவாக பெருமாள்சாமி ஆகியோர் இணைந்து வழங்கினர். இரண்டாம் பரிசினை கப்பிகுளம் புதிய பறவை கபடிக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
மூன்றாம் பரிசு பெற்ற கீழமங்கலம் முத்துக்கனி கபடிக் குழுவிற்கு எட்டாயிரம் ரூபாய் பரிசினை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண்பாண்டியன் வழங்கினார். மூன்றாம் பரிசுக்கான சுழற்கோப்பையினை ஆசிரியர் க.சுரேஷ்குமார் வழங்கினார்.
நான்காவது பரிசாக ரூபாய் எட்டாயிரம் புதிய பறவை பி அணிக்கு புதிய தலைமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெ.பிரபாகர் வழங்கினார். நான்காவது பரிசுக்கான சுழற்கோப்பையினை ஆசிரியர் ஜெயராஜ் நினைவாக உறுமி காட்சி ஊடகம் டிவின்பிஸ் டெக்னாலஜி இயக்குநர் ஜெ.பிரேம்குமார் வழங்கினார்.
ஐந்தாம் இடம் பிடித்த மதி பிரதர்ஸ் துரைசாமிபுரம் அணிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பா.அசோக்குமார் நான்காயிரம் ரூபாய் பரிசு வழங்கினார். ஐந்தாம் இடத்திற்கான சுழற்கோப்பையினை சிறைக்காவலர் பால்ராஜ் நினைவாக திருச்சி தொழிலதிபர் பா.சந்திரதாசன் வழங்கினார்.
ஆறாவது பரிசாக ரூபாய் நான்காயிரம் புத்தனேரி சாமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு சந்தனம் நினைவாக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.முனியசாமி வழங்கினார். ஆறாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை செ.சுந்தர்ராஜ் மற்றும் இ.எஸ்.எச். டெவலப்பர்ஸ் மனோஜ்குமார் இணைந்து வழங்கினர்.
ஏழாவது பரிசு பெற்ற பி.வி.என். கைஸ் அச்சங்குளம் அணிக்கு பாலையா நினைவாக ஆச்சிமசாலா பா.சக்திமுருகன் ரூபாய் நான்காயிரம் பரிசு வழங்கினார். ஏழாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை சந்தனம் நினைவாக ச.பாலமுருகன் வழங்கினார்.
எட்டாவது பரிசினை தமிழ்நாடு காவல்துறை எம்.பிரபாகரன் வழங்கினார். எட்டாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை துரைசாமி நினைவாக ஏ.கே.துருவன் வழங்கினார். இதனை கப்பிகுளம் புதிய பறவை சி அணியினர் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த ரைடருக்கான பரிசை ஐ.ஓ.சி.ஓட்டுநர் முனியசாமி வழங்கினார். சிறந்த கேட்சருக்கான பரிசை செல்லையா நினைவாக அன்னை கன்ஸ்ட்ரக்சன் செந்தூர்முருகன் வழங்கினார். சிறப்பு பரிசுகளை சுபாஷ், தினேஷ், ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.
பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற கபாடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தை கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி, கொடியன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் அருண்குமார், கப்பிகுளம் கவுன்சிலர் அரிச்சந்திரன், அக்காநாயக்கன்பட்டி கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் வக்கீல் எல்.ரமேஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது, “இளைஞர்கள் விளையாட்டின் மீது ஆர்வத்தை அதிகரித்தால் உடல் திறன் மேம்படும், கல்வியிலும் வளர்ச்சி அடைவார்கள். உடற்பயிற்சியும், விளையாட்டும் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கவும், ஆரோக்கியமாக வாழவும், வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்கவும் அவசியமானதாக உள்ளது. விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்திட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அரசுப் பணிகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆதலால் இளைஞர்கள் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று ஒன்றியப் பெருந்தலைவர் எல்.ரமேஷ் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆசிரியர் தமிழ்ராஜ், அ.ராஜா, ல.மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். பாபு நன்றி கூறினார். பசுவந்தனை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் கபடிப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.