கோவில்பட்டியில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கிவைத்தார்
கோவில்பட்டி ஸ்ரீ ராம்நகரில் உள்ள நகர் நல மையத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்ற, 5 வயது குழந்தைகளுக்கு உட்பட்ட, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாகை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கிவைத்தார். உடன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
31.1.2021 ஞாயிற்று கிழமை அன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1221 மையங்கள் செயல்பட்டு உள்ளன.
மேலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பொது இடங்கள் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வருபவர்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என 5164 பணியாளர்கள் பணியாற்றி உள்ளனர். இப்பணிக்காக 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான 31.1. 2021 இன்று துவங்கி மூன்று தினங்களுக்குள் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இம்முகாமில், 1,35,537 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி கடைபிடித்தனர்.