• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பஸ் மோதல் : மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக உயிரிழந்தார்!

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின்  மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், மெடிக்கல் நிறுவனத்தில் விற்பனை முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இன்று பணியில் இருந்த ஆனந்த் மருத்துவரை சந்திப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜெயராஜ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவரது பைக் மீது மோதியது.

இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த ஆனந்தின் உடல் மீது பேருந்தின் பின்பக்கரச் சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். 108 வாகனம் வந்து அவரை சோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக அவரது உடலை ஏற்றாமல் சென்று விட்டனர். 

விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய பாகம் போலீசார் ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வீல்சேர் கிரிக்கெட் வீரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!

எப்போதும்வென்றான் அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற 2 பேர் கைது!

  • Share on