• vilasalnews@gmail.com

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வீல்சேர் கிரிக்கெட் வீரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!

  • Share on

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீல்சேர் கிரிக்கெட் வீரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்:-

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான 8 அணிகள் பங்குபெற்ற டி 10 வீல் சேர் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி முதல் முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சுரேஷ் (திருவண்ணாமலை), சந்தோஷ் (திருப்பத்தூர்) ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வாகிருக்கிறார்கள். 

இவர்கள் இலங்கையில் நடைபெற இருக்கும் போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக கலந்து கொள்வார்கள். இந்த வீரர்களை கடந்த வாரத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும் வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்களோடே பயணம் செய்யும் அருமைச் சகோதரர் துரை பாண்டியன், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி மேற்கொள்வதற்கான இடம் மற்றும் தங்கும் வசதிகள் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கு - குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை!

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பஸ் மோதல் : மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக உயிரிழந்தார்!

  • Share on