• vilasalnews@gmail.com

நான் நீதிபதி எஸ்பியை பாக்கனும்... தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு வாண்டடாக வந்து கைதான போலி நீதிபதி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வந்த ஒருவர், தன்னை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வேண்டும் எனக்கூறி நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (21.05.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு காரில் வந்த ஒருவர், தனது பெயர் டாக்டர் பாஸ்கர் என்றும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுவதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வேண்டும் எனவும் அலுவலக வரவேற்பாளரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரவேற்பறையிலிருந்த போலீசார், அவருடைய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் துருவி, துருவி விசாரித்ததில், அவர் சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்மாள் நகரைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் பாஸ்கர் (57) என்பதும், அவர் நீதிபதி போல நடித்து, பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட காவல்துறை அலுவலக வரவேற்பறை காவலர் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர் பாஸ்கர் சென்னையில் வசிப்பதாகவும், இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம், தான் நீதிபதியாக இருப்பதாக அறிமுகமாகி, உடன்குடியில் உள்ள ராமச்சந்திரன் உறவினர் வீட்டிற்கு ராமச்சந்திரனுடன் வந்துள்ளார்.

அப்போது ஒரு பிரச்சனை தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையம் சென்று எஸ்.ஐயிடம், தனக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எஸ்.ஐ நியாயத்தின் அடிப்படையில்தான் செய்ய முடியும், நீங்கள் சொல்கிற மாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று கூறி அனுப்பியுள்ளார். இதனால் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எஸ்.ஐ மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளிக்க மாவட்ட காவல் அலுவலகம் சென்று தன்னை நீதிபதி எனக்கூறி நடித்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பாஸ்கரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது  செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

  • Share on

17 வயது சிறுவனிடம் பைக்; தங்க செயினை பறித்துச் சென்ற 3 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையிலடைப்பு!

தூத்துக்குடியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கு - குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை!

  • Share on