• vilasalnews@gmail.com

17 வயது சிறுவனிடம் பைக்; தங்க செயினை பறித்துச் சென்ற 3 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையிலடைப்பு!

  • Share on

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனிடம் இருசக்கர வாகனம் மற்றும் தங்க செயினை பறித்துச் சென்ற 3 பேரை 24 மணி நேரத்தில் உடனடியாக கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.


நேற்று முன்தினம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனிடம் அடையாளம் தெரியாத 3 பேர், அவரை கையால் அடித்து, அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும், அவர் அணிந்திருந்த 1¼ பவுன் தங்க செயினையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் 1. சரவணக்குமார் (24), கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரத்தினவேல் மகன் 2. ரஞ்சித் குமார் (27)  மற்றும் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் 3. கண்ணன் (25) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு மேற்படி 3 பேரையும் உடனடியாக 24 மணிநேரத்தில் கைது செய்து, அவர்கள் பறித்துச்சென்ற இருசக்கர வாகனத்தையும், தங்க செயினையும் பறிமுதல் செய்து, மேற்படி 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்படி நபர்களை கைது செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்பதும், அவர்கள் கஞ்சா போதையில்  இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் இச்சம்பவம் கஞ்சா போதைக்கும்பலால் நடந்துள்ளது எனவும், இதுகுறித்து சிறுவன் மற்றும் அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடனே வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட 3 பேரையும் உடனடியாக 24 மணி நேரத்தில் கைது செய்து, பறிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் தங்கச் செயினையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்திருக்கையில் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை இன்று பிரபல தினசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இது போன்ற ஒவ்வொரு வழக்குகளிலும் போலீசார் அடையாளம் தெரியாத நபர்களை யார் எனவும்,  அவர்கள் எங்கு இருக்கிறார்கள் எனவும், அவர்கள் பறித்துச் சென்ற பொருட்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிப்பதற்கு உரிய காலம் எடுக்கும் என்பதாலும், காவல்துறையில் பல்வேறு பணிகளுக்கு இடையில் இரவு, பகல் பாராமல் மிகுந்த சிரமத்துடன் செயல்பட்டு, சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து, பறித்துச் சென்ற பொருட்களை பறிமுதல் செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் இவ்வேளையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடம் காவல்துறையின் மீதான நம்பிக்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  • Share on

33ம் ஆண்டு நினைவு நாள்.. தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மரியாதை

நான் நீதிபதி எஸ்பியை பாக்கனும்... தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு வாண்டடாக வந்து கைதான போலி நீதிபதி!

  • Share on