தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.
இந்த நிலையில், இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தபசு மண்டபம் அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மலர்கள் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் காந்தி நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் அருணாச்சலம், விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்ன காளை, மைக்கில் பிரபாகர், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கில் பர்னாந்து, மாவட்ட செயலாளர்கள் குமார முருகேசன், ஜெயராஜ், நாராயணசாமி, கதிர்வேல், ஜான்சன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், வார்டு தலைவர்கள் சித்தரை பால்ராஜ், தனுஷ், கிருஷ்ணன், லட்சுமணன், ராஜரத்தினம், முத்துராஜ், ஜெய கிங்ஸ்டன், சசி பர்னாந்து, மகாலிங்கம், மாரியப்பன், ரெனீஸ்பாபு, ராமசாமி, ஜெயமணி சுரேஷ், கமலா தேவி, அந்தோணிசாமி, பெட்டின் பர்னாந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.