தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது குறித்தும், 26.05.2024 அன்று மறைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளர் என்.பெரியசாமியான் 7ம் ஆண்டு நினைவு தினம் குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.