• vilasalnews@gmail.com

மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

  • Share on

தூத்துக்குடியில், மகாத்மா காந்தியின் 74 வது நினைவு நாளை முன்னிட்டு, பல்வேறு சங்கத்தினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு 1ம் கேட் அருகில் உள்ள மாகாத்மா காந்தியின் திரு உருவ சிலைக்கு சிஐடியூ சார்பில் மாநில செயலாளர் ரசல் தலைமையில்,  இந்திய மாணவர் சங்கத்தினர், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் தேச நலன், சமூக ஒற்றுமை, வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி அனைவரும் ஏற்றனர். முன்னதாக விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்ட மசோதவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணை தலைவர் பொன்ராஜ், மற்றும் சங்கரன், மாவட்ட இணை செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மயில், இந்திய ஜனநாயக வாலிப சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாநக செயலாளர் காஸ்ட்ரோ, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளார் ஜாய்சன், மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் பாமக ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் யார் விற்றாலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

  • Share on