• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட மக்களே உஷார் - 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை... மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 15.05.2024 முதல் 17.05.2024 வரை 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கையும் 18ம் தேதி மிக கனமழைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கையும் மற்றும் 19ம் தேதி கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார் கள்.

  • Share on

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய 68 ஆம் ஆண்டு திருவிழா : விழா குழுவிற்கும், அரசிற்கும் கட்டபொம்மன் வம்சாவழியினர் வாழ்த்து!

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு!

  • Share on