திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.06.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.