எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்த நாளையொட்டி, அமைப்பு சார ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளரும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவருமான சுதாகர் ஏற்பாட்டில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க .சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், இந்து கோவில்கள், தர்காக்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது. கேக் வெட்டியும் அனைவருக்கும் வழங்கினர்.
தொடர்ந்து, அமைப்பு சார ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளரும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவருமான சுதாகர் ஏற்பாட்டில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகத்தை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.