முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ ஆலோசனைப்படி,
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எட்டையபுரத்தில் 500 பேருக்கு சுவையான சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி, சிவ சிவா, ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம், மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.