• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ( மே 10 ) 58 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

  • Share on

வீரசக்கதேவி  ஆலயத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி 58 அரசு  மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமம்  வீரசக்கதேவி  கோவில்  திருவிழா 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய இரண்டு நாட்கள்  நடைபெறவுள்ளது  தொடர்பாக  58 அரசு  மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை நாளை 10.05.2024 ஒரு நாள்  மட்டும்  மூடுவதற்கு  உத்தரவிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி  வைத்தல்  போன்ற  செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.

  • Share on

திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. கடல் உள்வாங்கியதால் பரபரப்பு!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவுக்கு 2000 போலீசார் பாதுகாப்பு : எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • Share on