திருச்செந்தூர் திடீரென கடல் சுமார் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடிவிட்டு முருகனைத் தரிசித்து விட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று திடீரென சுமார் 50 அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கியது. முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கடல் உள்வாங்கிய காட்சியை தனது மொபைல் போனில் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.