• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு!!

  • Share on

தூத்துக்குடி வாகன ஓட்டிகளுக்கு இனி கவலை இல்லை. வெயில் இருந்து தப்பிக்க புது முயற்சியாக சிக்னல்களில் பச்சை நிற நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்பொழுது அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது.

இது, இம்மாதம் 28ஆம் தேதி வரை தொடர்கிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில், கடும் வெயிலில் வாகன ஓட்டிகள் செல்லும் போது தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, லேசாக இளைப்பாற வசதியாக தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே புதுச்சேரி, திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை போன்ற இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, தற்போது தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னல்களிலும் தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடிவதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி இனிகோ நகரில் குடிநீர் பிரச்சனை : பொதுமக்கள் மறியல் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 9 முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் : ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு!

  • Share on